அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் சமந்தா… ஹிந்தியில் இவ்வளவு ஆர்வமா… வெளியான புதிய தகவல்…!!!

முன்னனி நடிகை சமந்தா அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யா இடையேயான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதைதொடர்ந்து புதிதாக சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதன்படி அவர் இந்தியில் அறிமுகமான தி ஃபேமிலி மேன் வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் அவர் தெலுங்கிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது. இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமந்தா கூடிய விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *