ஹிந்தி படத்தில் நடிக்கும் சமந்தா…. விவாகரத்துக்கு பின் எடுத்த முடிவு….!!

சமந்தா ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

புத்தி இருக்கா? செய்தியாளரிடம் சீறிய நடிகை சமந்தா! | Bhoomitoday

மேலும், விவாகரத்திற்கு காரணம் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், ஆடை வடிவமைப்பாளர் உடன் நட்பாக பழகியது நாகசைதன்யாவுக்கு பிடிக்காத காரணத்தினாலும் தான் இவர்கள் விவாகரத்து செய்துள்ளனர் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதற்கு சமந்தா, என்னை பற்றிய பரவிய செய்திகள் அனைத்தும் வதந்தி என கூறினார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விவாகரத்திற்கு பிறகு முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் நடிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *