”ரூ 27,700 – ரூ 44,700 சம்பளம்”நீதிமன்றத்தில் வேலை…..!!

தமிழக நீதிமன்றங்களில் Civil Judge பணிக்கான 176 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதால் தகுதியானவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பணியின் பெயர் :  Civil Judge

பணி எண்ணிக்கை : 176

சம்பள விகிதம் : 27 700 – 47,770

வயது :

விண்ணப்பதாரர்கள் (1-7-2019) தேதியின் படி இளம் பட்டதாரிகள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்கறிஞர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC , SCA , MBC/DC , BC , BCM மற்றும் விதவை பெண்கள் 40 வயது மிகாமல் அதற்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் .

கல்வித்தகுதி :

சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து, இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை பெற விரும்புவர்கள் வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

தகுதியானவர்கள் TNPSC _ஆல் நடத்தப்படும் Preliminary Examination  , Main Examination , நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

♦  Preliminary Examination_யில் 100 மதிப்பெண்களுக்கு குறிவகை கேள்விகள் கேட்கப்படும்.

♦ Main Examination_க்கு Translation Paper , Law Paper-1 , Law Paper – 2 , Law Paper – 3 , ViVa- Voce என தயாராக வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடம் :

Preliminary Examination என்றால் சென்னை , மதுரை , கோவை , திருச்சி , திருநெல்வேலி , சேலம் , தஞ்சாவூர் , வேலூர் , விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதே போல Main Examination என்றால் சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் :

ரூபாய் 500 இதனை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி யானவர்கள் tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2019