மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ திருவிழா…… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்துமூவர் வீதியுலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் சைவ திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற்றது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் முத்துப் பல்லக்கிலும் மற்ற 63 நாயன்மார்கள் கேடயத்திலும்  வீதியுலா வந்தனர்.

Image result for அறுபத்துமூவர் வீதியுலா

இந்த  விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த  சைவ திருவிழாவை காண ஆண்டுதோறும் வருவதாகவும், அறுபத்திமூவர் வீதியுலா சென்னைக்கு பெருமை சேர்க்கும் கலாச்சார விழா என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்