ஜவ்வரிசி வடகம் செய்வது எப்படி !!!

ஜவ்வரிசி வடகம்
தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1/4 கிலோ

பச்சை மிளகாய் – 5

கசகசா – 10 கிராம்

பெருங்காயம் – சிறிதளவு

இஞ்சி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தொடர்புடைய படம்

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை  கழுவி  முந்தைய நாள்  இரவே ஊற வைக்க  வேண்டும் .பின்னர்  ஜவ்வரிசியுடன், பச்சை மிளகாய், கசகசா, பெருங்காயம்,உப்பு,  இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக்  கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  மாவு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஜவ்வரிசி வெந்ததும் இறக்கி விட வேண்டும். மாவினை எடுத்து சிறிய வட்டங்களாக  துணியில் ஊற்றி, நல்ல வெயிலில்  3 நாட்கள் காய  வைத்து எடுத்தால் ஜவ்வரிசி வடகம் தயார் !!!