“காவேரி கூக்குரல்” பிரபலங்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்..!!

ஈஷாவின் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்திற்கு அதன் நிறுவனர் சத்குரு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். 

தென்னிந்தியாவில் உயிர்நாடியான காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. இதனை அந்த அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார்.

Image result for sadhguru vasudev meet celebrities

இதற்கு ஆதரவு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் விளம்பரம் அளித்து வந்த இவர், தற்போது திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து வருகிறார். இதுவரை இவர் பிரபு, மனோபாலா, மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து இத்திட்டத்திற்க்காக ஆதரவு கோரியுள்ளார்.