ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு..!!

கிரிக்கெட் வீரர் சச்சின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது ராயல்டி வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார். 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பார்டன் சர்வதேச விளையாட்டு நிறுவனத்திடம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளார். அந்த ஒப்பந்தம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் பொருள்களை விளம்பரம் செய்வதற்கு ஆண்டிற்கு ஆண்டிற்கு ஒருமில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க வேண்டும் என்பதுதான். அதன் படி, சச்சின் படம், லோகோ போன்றவற்றை அந்நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தும்.

Related image

ஆனால் ஒப்பந்தத்தின் படி 2018-ம் ஆண்டு விளம்பரத்திற்கான தொகையை அந்நிறுவனம் சச்சினுக்கு கொடுக்கவில்லை.  அதனால் உரிய தொகையை வழங்க வேண்டும் என்று சச்சின் அந்நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் காரணமாக அவர்  ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டார்.

Image result for Sachin by Spartan

மேலும் என்னுடைய பெயர், லோகோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து, ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தை நாடிய  சச்சின் ராயல்டி வழங்க உத்தரவிட கோரி அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.