சச்சினை தொடர்ந்து…முன்னாள் கிரிக்கெட் வீரர்…பத்ரிநாத்க்கும் கொரோனா உறுதி …!!!

சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் (வயது 40) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரனான சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக தலைமையேற்று நடத்தினார்.  20 ஓவருக்கான  சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் ,இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற்று ,சாம்பியன்ஷிப் பட்டத்தையும் இந்திய அணி கைப்பற்றியது .

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருப்பதை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும், கொரோனா  பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடிய யூசுப் பதானுக்கு கொரோனா  தொற்று உறுதியானது. இதேபோன்று இந்திய அணியில் விளையாடிய ,மற்றொரு வீரரான பத்ரிநாத்துக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டு , வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.