மறைந்த எஸ்.பி.பி பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சமீபத்தில் ஜிப்மர் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 5ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மக்கள் ஒத்துழைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ஒன்பது கோடி ரூபாய் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு . அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, நாளை புதுச்சேரியில் 7 இடங்களிலும், காரைக்காலில் 2 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று மத்திய அரசு அறிவுறுத்தல் படி 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.