பொருளாதார தடையால்…. விலை அதிகரிப்பு…. சர்க்கரைக்கு போட்டி போடும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணையின் விலையானது, உலக சந்தையில் அதிகரித்தது. தற்போது, பொருளாதார தடை காரணமாக ரஷ்ய நாட்டில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.

மேலும், சர்க்கரை விலை அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு சர்க்கரை வாங்கி வருகிறார்கள். தற்போது ரஷ்யாவில் இருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் ஏராளமானவர்கள் சர்க்கரை வாங்க போட்டி போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.