ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில்…. உக்ரைன் மக்களுக்கு…. உதவி செய்த தன்னார்வலர்கள்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த போரில் லூஹான்ஸ் பகுதியை ரஷ்யப்படைகள் கைப்பற்றியது. இந்த நகரில் போருக்கு முன்னர் பல்லாயிரம் மக்கள் வசித்து வந்தனர். ஆனால் போருக்கு பின் அங்கு சுமார் 100லிருந்து 150 பேர் வரை மட்டுமே வசித்து வருகின்றனர்.

இந்த போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக தன்னார்வலர்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையான உணவு, உடை போன்றவற்றை தன்னார்வலர்கள் இன்று வழங்கியுள்ளனர்.