75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நேரு யுவகேந்திரா, விளையாட்டுத்துறை, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த ஓட்டம் வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு தொடங்கி வடக்கு போலீஸ் நிலையம், பழைய மீன் மார்க்கெட் வழியாக சென்று மீண்டும் கோட்டை காந்தி சிலையின் முன்பு நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து இதில் மாவட்ட ஆட்சியர், வேலூர் மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் அலுவலக மேலாளர், நேரு மஹிந்திரா அலுவலர், விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். மேலும் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி 75 கிராமங்களில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.