கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸின் தீவிர விசாரணை….!!!

ரேஷன் கடை அருகே அரிசி கடத்திய வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டியில் ரேஷன் கடை ஒன்று அமைந்துள்ளது. இதன் பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் இதுபற்றி நடத்திய விசாரணையில் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது என்பதும் தெரியவந்தது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த மாவட்ட வழங்கல் அதிகாரி உத்தரவிட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் சிலரிடம் தாசில்தார் விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *