உத்திரபிரதேசத்தில் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் குறைப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் பாதி சம்பளம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் உபி மாநிலத்தில் கட்டிட தொழிலாளர்கள் பணியாளர்கள் என 15 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் கஷ்டத்தை உணர்ந்து ரூபாய் ஆயிரம் வழங்க இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.