ரூ. 500,00,00,000 இழப்பு… ”முட்டை , கோழி சாப்பிட சொல்லுங்க” அரசுக்கு கோரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோழிப்பண்ணை தொழிலிளர்களுக்கு ரூ 500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதோடு கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு அவதூறு , வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது.

கோழி இறைச்சி , முட்டை மூலமாக கொரோனா பரவும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அமைச்சர் கோழிக்கும் , கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறியும் கோழி இறைச்சி , முட்டை சாப்பிடுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கோழி சார்ந்த கோழி இறைச்சி , முட்டை வர்த்தகம் கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில் , கோழிப்பண்ணை தொழிலில் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் தினமும் 8 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி நாமக்கல்லில் பேட்டியளித்தார்.

அதே போல முட்டை கோழி இறைச்சி சாப்பிடுவதால் பாதிப்பில்லை என தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவும். முட்டைகளை ஏற்றுமதி செய்ய அரசு மானியம் தரவேண்டும் என்றும் முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வாங்கிலி சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.