ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் ….

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி  x  ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் ஃபுல்  H.D+  AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM   , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனின்  வெப்பத்தை குறைப்பதற்கு  புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் க்கான பட முடிவு

மேலும் புகைப்படங்களை  எடுக்க சோனி IMX586 சென்சார் 48 M.B . பிரைமரி கேமரா, 5 M.B . இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் A.I அம்சங்களும்  வழங்கப்பட்டுள்ளன.  ஸ்மார்ட்போனின்  முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 M.P . பாப்-அப் ரக செல்ஃபி கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது .ரியல்மி எக்ஸ் மாடல் கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருகிறது .மேலும் இது   3765 M.A.H . பேட்டரி மற்றும் VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடனும்  உள்ளது .இந்த  ஸ்மார்ட்போன்  முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.    ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷன்  போன்ற  புதிய ஸ்மார்ட்போன்களும்  கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் க்கான பட முடிவு

ரியல்மி X  ஸ்மார்ட்போன் போலார் வைட் மற்றும்  ஸ்பேஸ் புளு  போன்ற நிறங்களிலும்  கிடைக்கிறது. இதன் 4 G.B.RAM    ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 மற்றும் 8 G.B. RAM   விலை ரூ. 19,999 என விற்பனைசெய்ய முடிவெடுத்துள்ளனர் .  இதன் விற்பணை  ஜூலை- 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெற இருக்கிறது . மேலும்  ஜூலை 18 -ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது .ரியல்மி X  மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வெர்ஷன்கள் 8 G.B . RAM  , 128 G.B . மேலும் மெமரி மாடலின் விலை ரூ. 19,999 க்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம் கிஃப்ட் பாக்ஸ் 8 G.B.Rom  , 128 G.B . மெமரி மாடல் ரூ. 20,999 என்ற விலையில்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 616 GPU

– 4 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– டூயல் சிம்

– கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை

– 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

– டால்பி அட்மோஸ்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– யு.எஸ்.பி. டைப்-சி

– 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்