ரூ8,88,00,000 ”தங்க டாய்லெட்” தூக்கிய திருடர்கள்…..!!

பிரிட்டனில் தங்க டாய்லெட்_டை திருடர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் பத்தும் செய்யும் , பணம் என்றால் பிணம் கூட வையை திறக்கும் என்பார்கள். அதே போல பணத்துக்காக டாய்லெட்-டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் திருடு போனது சாதாரண  டாய்லெட் அல்ல. தங்கத்தால் செய்த  டாய்லெட். இதோட மதிப்பு ரூபாய் 8 கோடியே 88 லட்சமாகும்.

பிரிட்டன் நாட்டின் முன்னாள் வின்ஸ்டன் பிறந்த பிளென் ஹெய்ம் மாளிகையில் வைப்பதற்காக இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இந்த தங்க  டாய்லெட்நியூயார்க்கின் குக்கென் ஹெய்ம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட பின்னர்  பிளென் ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டது. இதனை நோட்டமிட்ட திருடர்கள் அதை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.