அடேங்கப்பா..!! ”ரூ 50,000,00,00,000 கேட்டு” பிரதமரை பார்க்க போகும் எடியூரப்பா ..!!

கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா,  சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை.  சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் ராஜீவ் காந்தி நகர் , வித்யா நகர் உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

Image result for karnataka rain Amit Shah visited

கர்நாடகாவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 48 பேர் பலியாகி இருப்பதாகவும் , 12 பேர் காணாமல் போய்யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அங்குள்ள பெலகவி மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர். அங்கு மட்டும் 4 லட்சத்து 8 ஆயிரத்து 322 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 1,224 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 3,93 956 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மழைவெள்ளத்தால் இதுவரை கால்நடைகளோடு சேர்த்து மொத்தம் 767 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிக பாதிப்பு ஏற்பட்ட  பெலகவி மற்றும் பாகல்கோட் மாவட்டங்களை விமானம் மூலம் பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் பார்வையிட்டார்.இந்நிலையில் சிவமோகா மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வ எடியூரப்பா, வெள்ளத்தால் 50 ஆயிரம் கோடி ரூபாய் சேதாரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக  நிவாரணப் பணி மேற்கொள்ள10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச 16_ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.