ரூ 20 உங்களுக்கா…? பெண்ணிடம் 40,000 , 35 சவரன் நுதனமாக கொள்ளை…..!!

வேலூரில் வங்கி வாசலில் பெண்ணிடம் இருந்த 40 ஆயிரம் மற்றும் 35 சவரன் நகை நூதன முறையில் கொள்ளை போன சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நிர்மலா.இவர் நேதாஜி சாலையில் உள்ள கனரா வங்கிக்கு அருகே பணம் மற்றும் நகையை கொண்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன் நிர்மலா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு உங்களின் பணம் கீழே கிடக்கின்றது என்று கூறியுள்ளான்.

இதையடுத்து நிர்மலா சற்று அசந்த போது அவர் வைத்திருந்த ரூ 40,000 மற்றும் 35 சவரன் நகையை கொள்ளையன்  நூதனமாக திருடிச்  சென்றுள்ளான். வங்கிக்கு முன்பு நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் கொள்ளையன் முகமூடி அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது.