ரூ15,00,000… தங்கம் கோமதிக்கு பரிசு அறிவித்தது அதிமுக…..!!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில்  தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும் பரிசு வழங்கி கவுரவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிமுக கட்சியின் சார்பில் தடகளப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கோமதி மாரிமுத்து_க்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியீட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *