ரூ 127,66,00,000 மற்றும் 98 கிலோ தங்கம் பறிமுதல்….. சத்ய பிரதா சாஹு தகவல்….!!

தமிழகத்தில் இதுவரை ரூபாய் 127.66 கோடி பணம் மற்றும் 98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தியாவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Image result for தங்க கட்டிகள்

இந்நிலையில் தமிழகத்தில்  வாக்கு நிலையில் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஏப்ரல் 10 ம் தேதி வரை   4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 127. 66 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 98கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இதில்  மாற்று திறனாளிகளுக்கு புரியும் வகையில் தேர்தல்அதிகாரி பேசுவதை செய்கை மூலம் விளக்கப்பட்டது.