“ரூ 105,75,00,000 குறைந்து விட்டது” பாஜக M.Pயின் வேட்புமனுவில் தகவல்….!!

கடந்த ஐந்தாண்டுகளில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 105.75 கோடி குறைந்து விட்டதாக பாஜக M.P தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மறைந்த மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வடமத்திய மும்பை மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பூனம் மகாஜன் நேற்று முன்தினம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை செய்தார். அப்போது தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் போட்டியிட்ட கடந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்தின் மதிப்பு ரூ 108 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தார். வழக்கமாக அரசியல் வாதிகளின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பு  குறைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூனம் மகாஜன் குறிப்பிட்டுள்ள வேட்புமனுவில் தன் கையிருப்பு ரொக்கம் 75 ஆயிரம் ரூபாய் என்றும், கணவரிடம் 29 ஆயிரத்து 650 ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு 2 ஆடி கார்கள் இருப்பதாக கூறியிருந்த அவர், தற்போது 11 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு ஹோண்டா கார் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். இப்படி திடீரென அவரின் சொத்து மதிப்பு குறைந்ததற்காக காரணம் அவரின் கணவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்வதாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டத்தினால்  சொத்துகளை விற்று கடனை அடைத்ததாகவும் அதனால் சொத்தின் மதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.