தந்தையிடம் தாம் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி 10 லட்சம் ரூபாய் கேட்ட மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகனும் 22 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகவும் , வித்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்திற்காக கலந்து கொள்வதற்காக வித்தியா சென்றார்.திருமணம் முடிந்து வியாழக்கிழமை இரவு காரைக்காலில் இருந்து அரசு பேருந்தில் ஏறி வித்யா காலையில் வீடு திரும்பி விடுவதாகவும் , வீட்டிற்கு அழைத்து செல்ல பேருந்து நிலையத்திற்கு வருமாறும் அண்ணனுக்கு வித்யா தகவல் கொடுத்தார்.ஆனால் காலையில் வித்தியா வரவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை தந்தை ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வித்தியாவை கடத்தி விட்டதாகவும் , ரூ 10 லட்சம் கொடுத்தால்தான் ஒப்படைக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். பணத்தை தயார் செய்து வையுங்கள் மீண்டும் அழைக்கிறோம் என கூறி இணைப்பை துண்டித்து விட்டனர். சிறிது நேரத்தில் விக்னேஷை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் வித்தியாவை கடத்தி விட்டதாகவும் , 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
விக்னேஷ் தங்கை கடத்தப்பட்டதை தான் எப்படி நம்புவது என்று விக்னேஷ் கேட்டது எடுத்து வித்யாவிடம் செல்போனை கொடுத்து பேச வைத்தனர். அதில் பேசிய வித்யா சிலர் தன்னை கடத்தி விட்டதாகவும் , தன்னை சீக்கிரம் காப்பாற்று என கூறும் போது செல்போனை பிடுங்கி அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டது கடத்தல் கும்பல். பின்னர் இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோயம்பேடு போலீசார் வித்தியா கடத்தப்பட்டு குறித்தும் , கடைசியாக வந்த செல்போன் அழைப்பு மற்றும் தற்போது செல்போன் எங்கு உள்ளது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர். மேலும் வித்தியா உண்மையாகவே கடத்தப்பட்டாரா? அல்லது கடத்தல் நாடகம் ஆட படுகிறதா ? என்பது குறித்து அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை விசாரணை செய்தது. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் கடத்தப்பட்டதாக கூறப்படும் வித்யா காரைக்காலை சேர்ந்த 24 வயதான மனோஜ் என்ற சுரேஷ் பாபுவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மனோஜ் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் வெளிநாடு செல்ல 10 லட்ச ரூபாய் பணம் தேவைப் படுவதாக வித்யாவிடம் கூறியுள்ளார்.இதனால் இருவரும் வித்தியாவின் தந்தையிடம் 10 லட்ச ரூபாயை பறிக்க கடத்தல் நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல் நாடகத்தை போலீசார் கண்டுபிடித்ததை அறிந்த வித்யா_வை நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் காரைக்கால் சென்ற தனிப்படை போலீசார் மனோஜை_யும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.இருவரையும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.காதனுக்கு உதவ தந்தையிடமே 10 லட்சம் கேட்டு சொந்த மகளே கடத்தல் நாடகம் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.