BREAKING : ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகிய இருவரும்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு  செய்யப்பட்டுள்ளது என்றார். 

மேலும் ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படுகிறது. 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். 8.69 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *