“விலை குறைந்த ராயல் என்பீல்ட்” மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் ..!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விலை குறைந்த புல்லட் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் புல்லட் 350எக்ஸ் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ் ஸ்டான்டர்டு மற்றும் 350எக்ஸ் இ.எஸ் என இருவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை மதிப்பு சுமார் 1.12 லட்சம் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது.

Image result for royal enfield bullet 350x

மேலும் இந்த புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் இ.எஸ் மாடல் ஸ்டாண்டர்டு வேரியெண்ட்டைவிட காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டு இருக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்களின் படி வைப்ரண்ட் பெயின்ட், ராயல் என்ஃபீல்டு லோகோ மற்றும் பிளாக்டு-அவுட் ஃபிட்மென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு  ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ்  மாடல் : புல்லட் சில்வர் ,சபையர் ப்ளூ மற்றும் ஆனிக்ஸ் பிளாக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது .

Image result for royal enfield bullet 350x

இதேபோல், 350எக்ஸ் இ.எஸ் மாடல் :  ரீகல் ரெட், ராயல் ப்ளூ மற்றும் ஜெட்பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த  இரு மாடல்களிலும் 246சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ். 4 புகை விதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .