மாற்றத்துடன் களமிறங்கும் RCB …… தொடர் தோல்வியில் இருந்து மீளுமா….. டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 20 -வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் விராட் கோலி விரக்தியில் இருக்கிறார். இதனால் அணியின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.  கடைசியாக நடந்த 5 வது போட்டியில் அந்த அணி 205 ரன்கள் இலக்கு வைத்தும் அதனை கொல்கத்தா அணியில் கடைசியில் ரஸெலின் ருத்ர தாண்டவத்தால் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து விராட் கோலி பவுலர்கள் கடைசியில் சரியாக பந்து வீசவில்லை என விரக்தியடைந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி  க்ரீன் நிற சீருடையில் களமிறங்க உள்ளது.

ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இந்த தொடரில்  5 போட்டிகள் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி கடைசியாக விளையாடிய 2 போட்டியில் தோற்றுள்ளதால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் விதமாக இந்த போட்டியில் உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூரு அணி 14 வெற்றியும், ராஜஸ்தான் அணி 6 வெற்றியும் பெற்றுள்ளது. மேலும்  1 போட்டி முடிவில்லை. ஆகவே இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் அனல் பறக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. மற்றொரு போட்டியில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.