மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி…!!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் யூடியூபில் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம் ‘மாரி 2’.  இந்த படத்தின் பாடல்களில் ஒன்றான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடினார். மேலும் இந்த பாடலுக்கு நடன மாஸ்டராக பிரபு தேவா இருந்தார். ‘மாரி 2’ படம் வெளிவந்த சில நாட்களில் ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப்பில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

Image result for rowdy baby

இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று ஒரு புதிய சாதனை படைத்தது. மேலும் இப்பாடல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறுதி வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது இப்பாடல் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.