“நன்னடத்தையில் விடுவிக்கப்பட்ட ரவுடி…. மீண்டும் குற்றம் செய்ததால் நடந்த விபரீதம்…. கோட்டாட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திணைக்குளத்தில் வசித்து வரும் முருகானந்தம் என்பவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் முருகானந்தத்தை கைது செய்து வருவாய் கோட்டாட்சியர் முன் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து முருகானந்தம் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி நன்னடத்தை பிணை வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரை இவர் அரிவாளால் வெட்டி காயப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நன்னடத்தை பிணையை ரத்து செய்ய காவல் துறையினர் கோரிக்கை விடுத்ததோடு பிணை காலமான 2 வருடமும் முருகானந்தத்தை சிறையிலடைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் முருகானந்தத்தை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *