தனிப்படை அமைத்து நடந்த தேடல்…. பிரபல ரவுடி கொலை வழக்கு…. 2 பேரை கைது செய்த போலீஸ்….!!!

பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் கோபாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இதில் ரவுடியான இவர் மர்ம நபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மர்ம நபர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கோபாலகிருஷ்ணனை கொலை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இவரின் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் ரவுண்டானா அருகே வைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குமுளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார், இசக்கி குமார் ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *