கைதி தப்பி ஓட்டம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. காஞ்சி கோர்ட்டில் பரபரப்பு….!!

கோர்ட் வளாகத்திலிருந்து கைதி தப்பி ஓடியதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணையில் விடுவிக்க காவல்துறையினரிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நன்னடத்தை பிணையில் விடுவிக்க 2  ஜாமீன்கள் தேவை என்பதால் கோர்ட் வளாகத்தில் பின்புறம் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து சென்றுள்ளார். இதனை கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவில் பார்த்த காவல்துறையினர் தவறாக புரிந்து கொண்டு கோர்ட்டு வளாகத்தில் இருந்து கைதி தப்பி ஓடியதாக அவரை தேடியுள்ளனர்.

பின்னர் விசாரணையில் அவர் நன்னடத்தை ஜாமீனுக்கு விண்ணப்பித்து இருக்கும் பத்மநாபன் என்பது சிவகாஞ்சி காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட பத்மநாபனை நன்னடத்தை ஜாமினில் விடுவிக்க கோரி சிவகாஞ்சி காவல்துறையினர் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்து சென்று உள்ளனர். அதன்பின்னர் ரவுடி பத்மநாபனுக்கு ஓராண்டு நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *