ஒரு வழியா பிடிச்சிட்டாங்க….!! நண்பர்களுடன் பதுங்கியிருந்த ரவுடி…. சுற்றி வளைத்த போலீஸ்….!!!

லாட்ஜில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய விக்கி என்பவர் தனது நண்பர்களுடன் நாகப்பட்டினத்திலுள்ள ஒரு லாட்ஜில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே இதுபற்றி  நாகை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேளாங்கண்ணியிலுள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அதில் ஒரு தனியார் லாட்ஜில் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் 3 பேரையும் சுற்றி வளைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் விக்கி தேவசகாயம், எழிலரசன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதில் விக்கி மீது சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதும் இவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும், தேவசகாயம் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவர் பெயரும் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *