இங்கிலாந்தில் ஆசையாக கொஞ்சும் போது ராட்வீலர் (Rottweiler) நாய் தனது காதை கடித்து துண்டாக்கியதாக வேதனையுடன் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்வேல்ஸைச் சேர்ந்த ஸ்டெஃப் ஜான் (Steff John) என்ற 28 வயதுடைய இளம்பெண் ஒருவர், சோமர்செட்டில் உள்ள காரவன் பார்க்கில் வாக்கிங் சென்ற ராட்வீலர் (Rottweiler) என்ற நாயை ஆசையுடன் கொஞ்சுவதற்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்ட்டார்.

அதன்படி உரிமையாளரும் அனுமதி கொடுக்க, ஸ்டெஃப் ஜானும் ராட்வீலர் நாயைத் தொட்டவுடனேயே அவ்வளவுதான் அடுத்த வினாடி, தன் மீது பாய்ந்து காதைக் கடித்துக் குதறியதாக வேதனையுடன் அவரே கூறியுள்ளார்.பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட பெண், காதின் பெரும்பாலான பகுதியை இழந்ததோடு மட்டுமில்லாமல் செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளார்.
இவர் 3 குழந்தைகளுக்கு தாயான இருக்கிறார். தற்போது தன் மகனே தன் நிலையை பார்த்து பயப்படும் சூழலுக்கு ஆளாகிவிட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். காதை கடித்து குதறிவிட்டு தப்பியோடிய நாய் மற்றும் அதன் உரிமையாளர்களை போலீசார் புகைப்படம் வெளியிட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.