மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெல்லி அணியுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரிசப்பன்ட் கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவத்தில் 78 (27) ரன்கள் (7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணியில் அதிகபட்சமாக யுவராஜ்சிங் 53 (35) ரன்கள் (5 பவுண்டரி, 3 சிக்சர்), விளாசினார்.

இந்தநிலையில் டெல்லி அணியுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, முதல் போட்டி பெரும்பாலான அணிகளுக்கு மிகவும் சவாலாகவே இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகள் செய்து விட்டோம். எங்களது திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. டெல்லி அணியின் ரிஷ்ப பன்ட் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை திசை திருப்பி விட்டார். என்று அவர் தெரிவித்தார்.