கிடைத்ததை கொண்டு வெற்றி பெறுவோம்…. “ராக்கெட் மேன்” சிவனின் சொல்ல மறந்த கதை…!!

இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி உலகமே தெரியாது என்று சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது முழு வாழ்க்கை கதையையும் இந்த தொகுப்பில் சுருக்கமாக காண்போம்:

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று இவர் கைலாசம் , செல்லம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த பின் கன்னியாகுமரி அருகில் இருக்கும் ஒரு மிகச் சிறிய கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இவரது குடும்பம் விவசாய குடும்பத்தை சேர்ந்தது. அப்பாவின்  நிலம் மாங்காய் தோட்டம் உள்ளிட்டவையே இவர்களது வருமானமாக இருந்தது. மாங்காய் சீசனில் மாங்காய் பறித்து அதை வெளியில் போய் விற்பது தான் இவர்களது குடும்பத் தொழிலாக இருந்துள்ளது. இப்படி குடும்பத்தில் பிறந்த சிவனுக்கு சிறுவயதிலிருந்தே கல்வி கற்பதற்கான ஆர்வம் இருந்து வந்துள்ளது.

Image result for இஸ்ரோ சிவன்

இந்நிலையில் சிவனது குடும்பம் மூன்று வேளை சாப்பிடுவதற்கு காலை முதல் மாலை வரை கடின உழைப்பை செலுத்தினால் மட்டுமே சாப்பிட முடியும் என்ற நிலையில் இருந்தது. பேண்ட் என்றால் என்னவென்று கூட  தெரியாமல் இருந்த சிவன் வேஷ்டி ,லுங்கியை கட்டிக்கொண்டு மட்டும் தான் கல்லூரிக்கு சென்று படித்து வந்தார். இவர் தனது வாழ்நாளில் தனது பள்ளி கல்லூரி காலங்களில் செப்பல் கூட போட்டது கிடையாது என்று கூறப்படுகிறது. இந்த ஒரு ஏழ்மையில் இருக்கக்கூடிய சிவன் குக்கிராமத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.

 

இந்த பள்ளியில் மிகக் குறைந்த அளவிலான ஃபேஸிலிடீஸ் மட்டுமே இருந்த நிலையில் தமிழ் மொழியில் கல்வி பயின்றவர். 12ஆம் வகுப்பு படித்து முடிக்கும் பொழுது இவருக்கு இன்ஜினியரிங் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தனது தந்தையிடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இன்ஜினியராக வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறியுள்ளார். அவரது தந்தை பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டுள்ளார் நீ இன்ஜினியரிங் படிப்பதற்கு காசு கிடையாது. இரண்டாவது நீ  வயக்காட்டில் வேலை பார்த்தால் நான் யாருக்காவது கூலி கொடுப்பதற்கு பதிலாக அந்த காசை மிச்சப்படுத்தி உனக்கு சாப்பாடு போடறேன் என்று தெரிவித்தார்.

 

வறுமையின் காரணமாக இன்ஜினியரிங் படிக்க முடியாமல் கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய இந்து கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். வயக்காட்டில் எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் சரி எவ்வளவு கடின உழைப்பை செலுத்தினாலும் சரி தனது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வகுப்பிலேயே நம்பர்-1 மாணவனாக திகழ்ந்து வந்தார் சிவன். இதில் பெரும்பான்மையான நேரங்களில் சிவன் மற்றவர்களிடம் கூறுவது என்னவென்றால் நான் நினைத்தது எதுவும் கிடைத்ததே கிடையாது ஆனால் அதற்கு கவலைப்படாமல் கிடைத்ததை வைத்து அந்த சமயத்தில் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன் என்று கூறுவார்.

Image result for isro sivan  photos

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் மீண்டும் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளார். அதன்பின் அப்பா அம்மா நிலைமையை புரிந்து கொண்டு வேலைக்கு செல்வோம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் சிவனின் வலியை உணர்ந்து கொண்ட அவரது தந்தை நீ போய் படி ஒரு முறை நான் உனது ஆசையை நிராகரித்து விட்டேன். மீண்டும் அதனை நிராகரிக்க  நான் விரும்பவில்லை என்று கூறி அவரது விவசாய நிலத்தை விற்று சிவனை படிக்க வைத்தார். இவர் பிடெக் மற்றும் ஏரோனாட்டிகள் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.

Image result for isro sivan  photos

படித்த படிப்பிற்கு எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் வேலையில்லாமல் நடு ரோட்டில் நின்ற வழியை சிவன் அனுபவித்துள்ளார். பின் இவர் மாஸ்டர் படிப்பை பெங்களூரில் உள்ள இன்ஸ்டியூட்டில் படித்துள்ளார். அதன்பின் ஐஐடி பாம்பே சென்று டாக்டர் படிப்பை முடித்துள்ளார். அதற்கப்புறம் இஸ்ரோவில் அவருக்கு வேலை கிடைத்தது. இஸ்ரோவில் யாருமே நிகழ்த்தாத ஏகப்பட்ட விஷயங்களை நிகழ்த்தி வந்தார். இஸ்ரோவில் பல துறைகளில் இருந்த தோல்விகளை அசாத்தியமாக கையாண்டு அதனை சரி செய்து வந்தார் சிவன்.

Image result for isro sivan  photos

இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் ராக்கெட் மேன் என்ற பெயரை சிவன் பெற்றுள்ளார். ஒரு காலகட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த சிவன் தற்போது இஸ்ரோவின் தலைவராக உள்ளார் என்றால் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். நினைத்தது கிடைக்காவிட்டாலும் கிடைத்தால் அன்பு செலுத்தி அதில் மட்டும் கவனம் செலுத்தி அதை திறம்பட செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்டு வந்தால் வாழ்வில் எதிர்பாராத அளவிற்கு வெற்றி பெற்று உயரலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் சிவன் வாழ்க்கை.