ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருள்கள் கொள்ளை… போலீசார் வழக்குப்பதிவு….!!

ஆரணியில் உள்ள வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியின்  டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி .  45  வயதான இவர் வக்கீலாக இருக்கிறார் . புலிகேசிக்கு  கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில்  குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு நேற்று முந்தினம் சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலையில் வீட்டின் முன்புற  கதவு  திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசியிடம்  செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.  குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து அவர் பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்ருடிருப்பத்தை  கண்டு  அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில்  இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம், மடிக்கணினி முதலிய ரூ.2½ லட்சம் மதிப்புள்ள  பொருள்கள் கொள்ளை போயிருந்தது . இதுகுறித்து ஆரணி  போலீசாரிடம் புகார்  செய்தனர்  . போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.கைரேகை நிருபனர்கள் சம்பவ இடத்துக்கு வந்து  கைரேகைகளை பதிவுசெய்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள திருடர்கள்  குறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன .