உதவி காவலர் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…!!

போக்குவரத்து  துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை  உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சண்முகம் அப்பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார்.

இதை அறிந்த மர்ம நபர் அவர் வீட்டின் பூட்டை  உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த , 2 கிலோ வெள்ளி, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம்  எட்டு சவரன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.காவலர் குடியிருப்பிலேயே நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.