“ஓரமாக நின்று இனிப்பு வழங்குங்கள்” சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக வினர்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்….!!!

சாலையில் அமர்ந்து பா.ஜ.க வினர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து நாட்களிலும் வழிபட கோவில்களுக்கு செல்ல அனுமதி என அரசு உத்தரவிட்டது. இதனை வரவேற்கும் விதமாக கரூரில் பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மனோஹரா கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உள்ளனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் சாலையின் ஓரமாக நின்று இனிப்பு வழங்குமாறு பா.ஜ.கவினரிடம் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் அப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *