இருசக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற பேத்தியும் இருக்கின்றார். இதனை அடுத்து இவர்கள் மூவரும் இரவு நேரத்தில் டீ கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மணியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இதனைப் பார்த்த கமலாவும் சிந்துஜாவும் மணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் மணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *