“ரிஷப் பண்ட் நிச்சயமாக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்” ….! ‘தினேஷ் கார்த்திக் நம்பிக்கை’…!!!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இளம் வீரர் ரிஷப் பண்ட் , ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதோடு அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவராக ரிஷப் பண்ட் இருக்கிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் குறித்து பாராட்டு பேசியுள்ளார். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது, அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . அதோடு இக்கட்டான நேரத்திலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார் .

அவருக்கு சவாலான நேரத்தில் விளையாடுவது,  பிடிக்கும் என்று  நினைக்கிறேன். அதுதான் அவரை இக்கட்டான சூழலிலும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் , எலிமினேட்டர் ஆட்டத்தில் தனி ஒருவனாக  நின்று ,டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரிலும் தனது திறமையை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். என்னை பொறுத்தவரை, இந்திய அணிக்காக அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார், என்று  தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார் . இந்திய அணியில் மூன்று  வடிவிலான போட்டிகளிலும், விளையாடியிருக்கும் தினேஷ் கார்த்திக் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், சுனில் கவாஸ்கருடன் இணைந்து டெலிவிஷன் வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார்.