மீண்டும் மீண்டும் சுவைக்க… பாசிப்பருப்பு பாயாசம்…!!

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு                         –  2 கப்

கிஸ்மிஸ் பழம்                     –  20

ஏலக்காய்                                –  10

முந்திரி                                     –  10

வெல்லம்                                  –  2 1/2 கப்

தேங்காய்                                –  8 மேசைக்கரண்டி

பால்                                            –  2 டம்ளர்

செய்முறை

  • முதலில் குக்கரில் 2 கப் தண்ணீர் வைத்து பாசிப்பருப்பை வேக வைக்கவேண்டும்.
  • வெல்லத்தை நன்றாக துருவி சூடான தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • தேங்காய், 5 முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள ஐந்து முந்திரியையும் கிஸ்மிஸ் பழத்தையும் ஒரு கடாயில் நெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்.
  • அகலமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து வேகவைத்த பாசிப்பருப்பையும் கரைத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து வறுத்த கிஸ்மிஸ் முந்திரியையும் போட்டு நன்றாக கிளறி விடவும்.
  • இறுதியாக பாலை நன்றாக காய்ச்சி அதனுடன் ஊற்றி மீண்டும் கிளறி இறக்கிவிடவும்.
  • சுவைமிகுந்த பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *