+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

கடந்த 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். இவற்றின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ , மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கூடங்கள் மூலமாக தேர்வு முடிவுகள் செல் போன்_க்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேபோல், தனித்தேர்வு எழுதியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை மாணவ , மாணவிகள்  பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை www.dge.tn.nic.in , http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்களே  மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என்று  அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.