“ராஜினாமா MLA”காங்கிரஸோடு இணைவது உறுதி….அமைச்சர் சிவக்குமார் பேட்டி …!!

கர்நாடகாவில் ராஜினாமா செய்த MLA நாகராஜன் மீண்டும் காங்கிரஸ்க்கு வர உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளிலிருந்து  16 MLAக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து  கர்நாடக மாநில மழை கால கூட்டத் தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.

Image result for கர்நாடக அமைச்சர் சிவகுமார்

ஆகையால் ஆளும் கட்சினர் அதிருப்த்தி MLAக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் சிவகுமார் அதிருப்த்தி MLAக்களில் ஒருவரான நாகராஜனை பெங்களூருவில் சந்தித்து சமாதானம் செய்த்துள்ளார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துக்கு பேசிய அவர், ஒரே குடுமபத்திற்குள் சண்டை வருவது சகஜம் தான், அதற்காக உறவு விட்டு போகாது என்று கூறி, ராஜினாமா செய்த MLA நாகராஜன் மீண்டும் காங்கிரசுக்கு வருவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.