“வெளியே செல்ல முடியவில்லை” நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கால்வாய்களில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் அணைகள் நிரம்பி வழிவதால் இணைப்பு கால்வாய்களில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டு கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது மோர்தானா கால்வாய் வழியே செல்லும் கால்வாயிலும் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த செயல் அலுவலர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர், தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோர் கால்வாயை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது கால்வாய்களின் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து ரங்கநாதர் நகரில் தேங்கியுள்ள மழை நீரையும் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *