மிரட்டிய கொரோனா…. சீனாவில் குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து..!!

கட்டுவிரியன் பாம்புகளில் விஷத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அவற்றை சீனர்கள் விரும்பி உணவாக சாப்பிடுகின்றனர். இதனை சாப்பிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த பாம்பை சூப் வைத்து சாப்பிடுகின்றனர். சீனர்களுக்கு இந்த வகை பாம்பு மிகவும் பிடிக்கும் என்பதால் அதிகம் விரும்பி வாங்குவது உண்டு. அதிலும் உயிருடன் இருக்கும்  பாம்புகளை வாங்கி சென்று சூப்பராக சமைத்து சாப்பிடுகின்றனர். ஆகையால், வெளவாலில் இருந்து கட்டுவிரியன் பாம்புகளுக்கு பரவி அதன் மூலமாக  சீன மக்களிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது .

Image result for Republic' Day in China Canceled

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை சீனாவில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அந்நாட்டில் 830 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Image result for Republic' Day in China Canceled

இந்த வைரஸ் மக்களிடம் பரவக்கூடாது என்பதற்க்காக அதனை தடுக்க அந்நாட்டில் உள்ள 5 நகரங்களில் சாலை, ரெயில் மற்றும் விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளையும் சீன அரசு தற்போது தடைசெய்துள்ளது. இதனிடையே, இந்திய குடியரசு தினம் வருகின்ற  ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

Image result for Republic' Day in China Canceled

ஒவ்வொரு ஆண்டும் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்படுவது  வழக்கம். ஆனால் இந்த முறை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்குதல் சீனா முழுவதும் வேகமாக பரவிவருகின்றது. ஆகவே சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படப்பட இருந்த  இந்திய குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *