நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாளை சுதந்திரதின விழா என்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு இதுவே முதல் முறையாகும். ஆகவே இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 7: 20 மணியளவில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு கோவிந்த் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்த்தார். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை, இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதாகும் என்று உரையாற்றினார்.