புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!!

உணவு பாதுகாப்பு,  தரச் சான்று சட்டத்தின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக  உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா,  குளிரூட்டப்பட்ட புகையிலைகளுக்கு தடை விதித்து உணவு  பாதுகாப்புத்துறை ஆணையர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த  சட்டத்தை ரத்து செய்ய கோரியும், தடை உத்தரவை ரத்து செய்ய கோரியும்,  தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய கோரியும் 2 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காகத்தான் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அது புகையிலையை ஒரு  உணவு பொருளாக சுட்டிக்காட்டவில்லை. அதன் அடிப்படையில் புகையிலை, சிகரெட், பிற புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவது மற்றும் விநியோகப்படுதலை முறைப்படுத்துவதற்கான சட்டமே தவிர, தடை விதிப்பதற்கான சட்டம் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார். அதனடிப்படையில் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  இந்த நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்

Leave a Reply