ரிலையன்ஸின் புதிய ஜியோஜிகாஃபைபர்,கட்டணம் மற்றும் விவரம் வெளியீடு….!!!

ரிலையன்ஸின் நிறுவனம் தனது புதிய ஜியோஜிகாஃபைபரின் கட்டணம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Reliance இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த  2018-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவையை  அறிமுகப்படுத்தியது .  ஜியோஜிகாஃபைபர் சேவையின் கீழ் தொலைகாட்சி சேனல்கள்,நேரலை , ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, மற்றும் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது  2019-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறு இருக்கிறது. Telecom சந்தையை தொடர்ந்து Reliance ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் (Broadband) சந்தையில் கால்பதிக்க  இருக்கின்றது.
ரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்
பிராட்பேண்ட் சேவையுடன் கூடிய செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் வசதி, 600-க்கும் அதிக டி.வி. சேனல், 1000-க்கும் அதிக திரைப்படம் மற்றும் பாடல் நேரலை தொலைகாட்சி சேனல்களை ஸ்டிரீம் செய்ய கூடிய  ஜியோ ஜிகாடி.வி, அறிமுகம் செய்யவுள்ளது. வெளியிடப்பட்ட  விவரங்களில்  ஜியோஜிகா ஃபைபர்   சேவை ஆரம்ப கட்டணம் மாதம் ரூ. 600  என்று அறிவித்துள்ளது.
Image result for ரிலைன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர்
இதில் தொலைகாட்சி மற்றும் லேண்ட்லைன் சேவை பயணியாளர்களுக்கு அதிவேக டேட்டா போன்ற வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டேட்டா வேகம் 1Gbps ஜியோஜிகாஃபைபர் சேவையில் வழங்கப்பட இருக்கிறது. இந்த  டேட்டா அதிகபட்ச வேகம்  என்பதால் இதற்கான கட்டணம் அதிகமாகவும், மலிவு விலை சலுகையில்  இதற்கான டேட்டா வேகம் குறைவாகவும் இருக்கக் கூடும் என தெரிய வருகிறது.