“இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்” அமரர் ஊர்தியை மறித்து சாலை மறியல்…. வேலூரில் பரபரப்பு….!!!

பணியில் இருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபருக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த கதிர்வேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கதிர்வேல் அதே பகுதியில் வசித்து வரும் பாபு என்பவருடைய வயலில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி மின்கம்பியை ஒட்டி சென்ற மரக்கிளையை வெட்டி கொண்டு இருக்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுமதித்து வைத்துள்ளனர்.

மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுபற்றி அவரது தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் கே.வி குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கதிர்வேலின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு இலவச அமரர் ஊர்தியில் கொண்டு வந்தனர்.

இதனை அறிந்த கதிர்வேலன் உறவினர்கள் அமரர் ஊர்தி வரும் வழியில் அமைந்துள்ள மின்சார அலுவலகத்திற்கு எதிரே திறந்து கதிர்வேலின் இறப்பிற்கு கட்டாயம் நியாயம் கிடைக்கவேண்டும் என்றும், இதற்கு காரணமானவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரியும் ஊர்தியை மறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *