“பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பிராந்திய கட்சிகள் போராட வேண்டும்”…. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு…!!

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு செய்தியார்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ் கட்சியுடன் பிராந்திய கட்சிகள் நிற்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அநீதிக்கு எதிராக பிராந்திய கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும். தேசிய கட்சி மீதான தாக்குதல் நாளை உங்களையும் நோக்கி வரும். எனவே அனைவரும் ஜனநாயகத்திற்காகவும் நீதிக்காகவும் போராடுங்கள் என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது இமாச்சல் பிரதேசம் முதல்வரும் காங்கிரசுக்கு ஆதரவாக அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.