ஆக்ஷனில் கலக்கும் ரெஜினா கசான்ட்ரா…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல நடிகை ரெஜினா கசான்ட்ரா ஆக்சனில் களமிறங்கியுள்ளார் என தகவல் 

பிரபல நடிகர் பிரசன்னா நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இதை தொடர்ந்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ரெஜினா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தில் ரெஜினா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மேலும் மற்றொரு பிரபல நடிகையான நிவேதா தாமஸும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகையால் நடிகை ரெஜினாவும், நிவேதா தாமஸும் இப்படத்திற்காக ஆக்சன் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *